இ - வரிசை இலவங்கப் பட்டை

 



இலவங்கப் பட்டை – LAVANGA PATTAI

வேறு பெயர்கருவாய் பட்டை

ஆங்கிலபெயர் CINNAMON – BARK

தாவரவியல் பெயர் – CHINNAMONUM ZEYLANICUM 

                கருவாப்பட்டைச் செடி இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உரிய பயிர், ஆயினும் இலங்கையில் தான் அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. இது மற்ற நாடுகளை விட உயர்வானது. இது சமையலில் வாசனைக்காக பயன்படுகிறது. இது வாய் நாற்றத்தைப் போக்கும்.

சுவை – காரமும், இனிப்பும் உள்ளது, வீரியம் – சீதம் பிரிவு கார்ப்பு

செயல் – வெப்பமுண்டாக்கி ------ STIMULANT

         அகட்டுவாய்வகற்றி ---- CARMINATIVE

         காமம் பெருக்கி ---------- APHRADISIAC 

குணம் --- தாது நஷ்டம், ஆசியநோய், சர்ப்ப விஷம், பேதி அதிசாரம், பூதகிரகம், இரைப்பு, சகலவிஷம், சிலந்தி விஷம், இருமல், இரத்தக் கடுப்பு, வயிற்றுக் கடுப்பு, உல் மூலம் ஆசனப்புண், இவைகளையும் நீக்கும். தேகத்துக்கு குளிர்ச்சி உண்டு பண்ணும்.

பாடல் –

தாதுநட்டம் பேதி சருவ விஷம் ஆசியநோய்

பூதகிர கஞ்சிலந்திப் பூச்சி விடம் – சாதிவிடம்

ஆட்டு மிறைப் போடிருமல் ஆகியநோய்க் கூட்டமற

ஒட்டுங்இல வங்கத்துரி

சன்னலவங்கப் பட்டை தான் குளிர்ச்சி யுண்டாக்கும்

இன்னும்மிரத் தக்கடுப்பை யீர்க்குங்கான் – முன்மை கூறும்

உந்திக் கடுப்பகற்றும் உண்மூலப் புன்போக்கும்

கந்தமிகு பூங்குழலே ! கான்

                                                --- அகத்தியர் குணவாகடம்

குணம் –

       கருப்பையைச் சுருங்கச் செய்கின்ற குணமுண்டு, பெரும்பாடு, மந்தப் பிரசவவேதனை, இவைகளுக்கு கொடுப்பதுண்டு.

அளவு – இப்பட்டையயை தூள்செய்து 500 mg  முதல் 2 gm வரை கொடுக்கலாம்.இதை பெரும்பாலும் தனியாகக் கொடுப்பது கிடையாது. 

சீதபேதியில் 1gm முதல் 2 gm வரை கொடுக்கலாம். இந்தச் செடியில் இருந்து மூன்று வகை தயிலம் எடுக்கப்படுகிறது.

அ) பட்டையில் இருந்து எடுக்கப்படுவது, பொன் நிறச்சாயல் இருக்கும். வாசனைக்கும் பயன் படும்.

ஆ) இலையில் இருந்து எடுக்கப்படுவது – கிராம்பு மனம் இருக்கும் இதனைக் கிராம்புத்தைலம் என்று கூறுவார்.

இ) வேர்ப்பட்டையில் இருந்து எடுப்பது மஞ்சள் நிறமாக இருக்கும் தண்ணீரைப் பார்க்கிலும் லேசாக இருக்கும்.

       இலையில் இருந்து எடுக்கும் தைலம் வாத ரோகங்களிலும், தலைவலி, பல்வலி, முதலிய நோய்களில் உபயோகப்படும். மற்றும் அருவருப்பு மருந்துகளில் நறுமணத்திற்கு சேர்ப்பதுண்டு. அளவு 2-5 துளிவரை

இளவஞ்க்ப்பட்டைச் சூரணம் --

இலவங்கப் பட்டை ---------- 1 பங்கு

ஏலம் ------- --------- --------- ---- 1 பங்கு

சுக்கு -------- --------- --------- ---- 1 பங்கு -------- இவையாவும் சமன் எடை எடுத்து சூரணித்து வைத்துக் கொண்டு 500 mg  முதல் 3gm வரை சர்க்கரை அல்லது தேனில் கலந்து கொடுக்க வாந்தி, வயிற்றுப் போக்கு, பொருமல், வயிற்று வலி, இரத்தக் கடுப்பு நீங்கும்.

கசாயம் ---

       இலவங்கப் பட்டை, சோம்பு, சுக்கு, வாய்விடங்கம், கிராம்பு 3.5 gm எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 400 மில்லி நீர் விட்டு 100  மில்லி யாகச் சுண்டவைத்து 15மில்லி முதல்  30 மில்லி வரை தினம் இரண்டு வேலை கொடுத்துவர வயிற்று வலி குன்மம், கிரிப்பூச்சி நீங்கும். இலவங்கப் பட்டை ஒரு பங்கு காய்ச்சுக் கட்டி ஒரு பங்கு பொடித்து போட்டு கொதி நீர் என்பது பங்கு விட்டுக் கலக்கி இரண்டு மணி நேரம் வைத்து இருந்து அதில் முப்பது மில்லி தினம் மூன்று வேலை கொடுக்க அதிசாரம் தீரும்.

குறிப்பு – இது நாட்டு மருந்துக் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் கிடைக்கும்  

  

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி