இ - வரிசை இலவங்கம்



இலவங்கம் --- LAVANGAM :---

வேறு பெயர்அஞ்சுகம், உற்கடம், கருவாய், கிராம்பு சொசம்,திரளி, வராங்கம்

ஆங்கிலப் பெயர் --------- CLOVES

தாவரவியல் பெயர் ----- CARYOPHYLLUM 

       இது இந்தியாவிலும் இலங்கையிலும் பயிராகிறது. எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். இது நல்ல மனம், காரம், விறுவிறுப்பு உள்ளதாகவும் கிள்ளினால் தைலப் பசை உள்ளதாயும் இருக்கும்.

சுவை காரமும் விறு விருப்பும் உள்ளது. வீரியம்வெப்பம், பிரிவுகார்ப்பு

செயல் – இசிவகற்றி – ----- --------- ANTISPAMODIC

         அகட்டுவாய்வகற்றி ---- CARMINATIVE

          பசித்தூண்டி ---------------- STOMACHIC  

குணம் --  கிராம்பு பித்த மயக்கம், பிரதி வாந்தி, இரத்தக் கடுப்பு, கிராணி, ஆசனப்பிடுங்கள், சுக்கில நட்டம், செவிநோய், சிவந்த மச்சம், கருத்த மச்சம், விவுர்தம், சம்விவுர்தம், என்ற வாதங்கள், கண்ணில் பூ, படை இவைகளை நீக்கும். கரிமசாலையில் சேர்க்கப்படுகிறது.

பாடல் ---

பித்த மயக்கமரும் பேத்தியோடு வாந்தியும் போம்

சுத்தவிரத் தக்கடுப்பும் தோன்றுமோ – மெத்த

இலவங்கங் கொண்டவருக் கேற்ற சுகமாகும்

மளமங்கே கட்டு மென வாழ்த்து

சுக்கிலநட் டங்கர்ன்ன சூலைவியங்க லாஞ்சனந்தாம்

சிக்கல் விடாச் சர்வாசியப் பிணியு மக்கிக்குட்

டங்கப்பூ வோட்டு தரிபட்டுந் தோன்றிணலில்

வாங்கப்பூ வோடுரைத்து வா

                                                --- அகத்தியர் குணவாகடம்

மருத்துவ குணம் – கிராம்பை நீர் விட்டு மைபோல் அரைத்து நெற்றியில் மூக்குத் தண்டு கன்னப் பகுதிகளில் பற்றுப்போட நீர் ஏற்றம் மூக்கடைப்பு நீங்கும். தணலில் வெதுப்பி வாயிலிட்டுச் சுவைக்க தொண்டைப்புண் ஆறும் ஈறுகளில் புண் ஏற்ப்பட்டு ஆடும் பற்கள் வலி நீங்கி வலுவடையும்.

       120 ml  வெந்நீரில், கிராம்புதூள் 8 to 10 gm  சேர்த்து அரைமணி நேரம் வரையில் மூடிவைத்து வடிகட்டி 20 மில்லி முதல் 30  மில்லி வரை விதம் உட்கொள்ள, மந்தாக்கினி (பசிமந்தம்), கருப்பிணிகளின் வாந்தி கிராணி நீங்கும்.

       கிராம்பு, சிருனாகப்பு, விலாமிச்சம் வேர், சுக்கு, மிளகு,திப்பிலி இவைகள் சம எடை எடுத்து சூரணித்து சீனிசேர்த்து வடகம் செய்து கொடுக்க பித்த மயக்கம், பேதி, வாந்தி ஆசனப்பிடுங்கள் தீரும் 1gm to 2gm  எடை உள்ள மாத்திரைகளாக செய்து கொள்ளவும்.

கிராம்பு ------------- 5  பங்கு

சுக்கு ----------------- 5 பங்கு

ஓமம் --------------- 6 பங்கு

இந்துப்பு ----------- 6 பங்கு எடுத்து இடித்து சூரணித்து ஒன்று முதல் மூன்று கிராம் வரை கொடுக்க நல்ல பசி எடுக்கும் வாயு நீங்கும்

       கிராம்பு, நிலவேம்பு சமன் அளவு எடுத்து குடிநீர் செய்து கொடுக்க பசியுண்டாகும், அசதி நீங்கும்.

       நிலவாகை கசயத்தில் 500mg to 1 gm  கிராம்புத்தூள் சேர்த்துக் கொடுக்க சுகமாய் பேதியாகும்.

பித்தசாந்தி சுக்கில நஷ்டம், வயிற்றுவலி வயிற்றுப்போக்கு இவைகளுக்கு செய்கின்ற மருந்துகளில் சேர்த்து தருவது இயல்பு.

கிராம்புத்தைலம் ---

வெளிப்புறச் செயல் – அழுகலகற்றி – --- - ANTISEPTIC

                     உணர்ச்சி போக்கிLOCAL ANAESTHETIC

                     தடிப்புண்டாக்கி ------ RUBEFACIENT

உள்புறச்செயல்  --    பசித்தூண்டி ----------- STOMAACHIC

                     உடலுரமாக்கி -------- NUTRITIVE 

இலவங்கத்தை வாலையிலிட்டு வடித்த தைலம், துல்லியமாயும், காரமாயும் மனமுள்ளதாயும் இருக்கும் நாவில் பட்டால் சிவக்கும். இரண்டு முதல் மூன்று துளி வரை சர்க்கரையுடன் கலந்து கொடுக்க பசி எடுக்கும் வாயு பிரியும். பல்வலிக்கு பஞ்சில் நனைத்து பல்லின் மேல் வைக்க குணம் தரும்.  

இது கடைகளில் கிடைக்கும் 

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி