இ - வரிசை இலுப்பை





இலுப்பை – ILUPPAI

வேறு பெயர்இருப்பை, குலகம், மதுகம்

ஆங்கிலப் பெயர்THE MAHWASH (OR) MOWA TREE (OR)  THE NARROW – LEAVED MOHUA

தாவரவியல் பெயர் BASSIA LONGIFOLIA 

இது இந்தியாவில், இலங்கையிலும் பயிராகும் மரம்

பயன்படும் பாகங்கள் – இலை, பூ, காய், பழம் வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை  

சுவைதுவர்ப்பு, வீரியம்சீதம், பிரிவுகார்ப்பு.

செயல் – துவர்ப்பி ------- ASTRINGENT

         வெப்பமுண்டாக்கிSTIMULANT

         உரமாக்கி ------------- TONIC

இலை – பாற்பெருக்கி -------- LACTAGOGUE 

குணம் – இலையை முலையில் வைத்துக் கட்ட பால் சுரக்கும்.

சுவை இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவுஇனிப்பு

செயல் – உள்ளழாற்றி -------------- DEMULCENT

         குளிர்ச்சியுண்டாக்கி --- REFRIGERANT

         வெப்பமுண்டாக்கி ------STIMULANT

         உரமாக்கி ---------------------  TONIC  

பூவினால் பித்தசுரம், தாக ரோகம் நீங்கும், பித்தமும், பிரமையும் உண்டாகும்.

பாடல் –

குன்றா விளுப்பையின் பூ கூர்மதுரம் வாசனையாஞ்

தின்றார் பயித்தியமுஞ் சேருங்கான் – மன்றளுருந்

தார்குழலே ! பித்தசுரம் தாக்க்ந் தணிந்துவிடும்

வார் தயக்க மெய்தும் வழுத்து

                                                          ---- அகத்தியர் குணவாகடம்

பூவைக் கசாயம் செய்து கொடுக்க தேக இளைப்பு நீங்கும் காய்ந்த பூவை வதக்கி விரை வீக்கங்களுக்கு ஒற்றிடமிட அவ்விடத்தில் வேர்வை தோன்றி வீக்கம் குறைந்து கொண்டே வரும்.

       இதைக் கொண்டு சாராயம் செய்வதுண்டு. மேலும் இப் பூவிலிருந்து சர்க்கரை எடுக்கலாம் இதைச் சர்க்கரைக்குப் பதிலாக உபயோகிக்கலாம்.இதைச் சுத்தப் படுத்தி கல்க்கண்டுக்குச் சமமாக செய்து மருந்துகளில் உபயோகிக்கலாம். இக் காரணம் கொண்டே “ஆலை  இல்லா ஊருக்கு இலுப்பை பூச் சர்க்கரை “ என்ற பழமொழியும் வழங்குகிறது.

       சர்க்கரை அல்லது வெல்லப்பாகில் பூவைச் சேர்த்து உருண்டை செய்து ஏழைகள் உணவாகக் உண்பார்கள் இப் பூ வின் சாற்றில் இரும்பு சுத்தியாகும்

காய் – காயயைக் கீறினால் வெளிப்படும் பாலை வென்பாசனத்துக்கு நாள் தோறும் பூசிக் காயவைத்து உலர்த்திக் கொண்டே வந்து கால் அங்குல மட்டும் பால் ஏற்றி அப்பிய பின் கொம்புக் கள்ளிச் சாம்பலுக்குள் வைத்து எரிக்கக் கட்டும்

பட்டை – செயல்உடற் தேற்றி----------- alterative

                  வெப்பம் உண்டாக்கிstimulant

                  துவர்ப்பி --------------------- astringent

                  உரமாக்கி ------------------- tonic

                  பசித்தீ தூண்டி ---------- stomachic 

பட்டைக் கசாயத்தை வாத ரோககங்களில் பலன் கொடுப்பதுடன் புண் சொறிகளை கழுவ உபயோகிக்கப்படும். இதன் தைலம் கால் கடுவனைப் போக்கும் ( சித்தர் உரை விளக்கத்தில் பார்க்கவும்)

வித்து ( விதை ) --  

குணம் – இலுப்பை விதை அந்தர வாயுவையும், விடத்தையும் போக்கும்

“ இலுப்பை விதையந்திர வாய் விற்கும் விடத்திற்கும்

அலுப்பை யுன்டாக்கியகற்றும் “  ----- அகத்தியர் குணவாகடம்

மருத்துவ குணம் – வித்தின் மீதுள்ள ஓட்டை நீக்கி, உட்பருப்பை நசுக்கி வதக்கி ஒற்றிடமிட மேற்கண்டவை விலகும்.

இலுப்பை நெய் –

       விதியின் ஓட்டைப் போக்கி இடித்துப்  பிட்டாவியலாய் அவித்து சூட்டுடன் ஆலையில்லிட்டு ஆட்டி எடுக்க நூற்றுக்கு முப்பது பங்கு நெய் தேறும் இதற்கு இலுப்பை நெய் என்றும் திப்பிக்கு இலுப்பை புண்ணாக்கு என்றும் பெயர்

பாடல் –

       கரப்பானடருங் கடி சிரங்கு புண்ணும்

       உரப்பா மிடுப்பு வலிப்யோடுங் – கரப்பான்

       பாகு மொழி மாதே ! பல முண்டாந் துற்பலம்

       தேக்கு மிளுப்பையி நெய்க்கே ......... அகத்தியர் குணவாகடம்

இதனால் கரப்பான், சிரங்கு புண் உண்டாகும் ஆனால் இடுப்பு வாதம் துர்பலம் நீங்கும் நெய்யை வெதுப்பி இடுப்பு வாதத்திற்கு தேய்த்துவர அவ்வாதம் விலகும் உடல் பலக்கும்.

       இது வெகு துரிதத்தில் காரலேடுத்துப் போவதால் உப்புக் கட்டும் தைலங்களில் சேர்ப்பது இல்லை. ஏழைகள் இதில் சிற்றுண்டி செய்து உண்பார்கள் சேற்று புண்ணிற்கு பூசலாம் விளக்கு எரிக்கவும் பயன் படும்.

       இதில் நாகத்தை உருகிச் சாய்க்கச் சுத்தியாகும் இது பற்றிய தலைப்பில் பார்க்கவும்.

இலுப்பை பிண்ணாக்கு

சுவை – கைப்பு, துவர்ப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு 

செயல் – தொற்றுப் புழுவகற்றிdisinfectant

         புழுக் கொல்லி ------------ anthelmintic 

         வாந்தியுண்டாக்கி ------ emetic 

இலுப்பை பிண்ணாக்கு கடுவன்,புண், கரப்பான், பீஜவீக்கம், திரி தோஷம், எண்ணெய்ச் சிக்கு ஆகியவற்றைப் போக்கும்.

பாடல் –

போதிதிக் கடுவனொடு புண்ணாங் கரப்பானும் போம்

வித்தைப்பு தொடமிவை விராவாம் – மெத்தனவே

எண்ணெய்க் கசிவுகளு மேகு மிளுப்பை விதைப்

பின்னாக்குக் கென்றறியப் பேசு ..... அகத்தியர் குணவாகடம்

இதைச் சுட்டு தேங்காய் எண்ணையுடன் கலந்து பூசக் கடுவன் புண் கரப்பான் போகும். இதைப் புகைக்க வீட்டில் உள்ள புழு பூச்சு எலிகள் வீட்டை விட்டுஅகலும்

இப் பிண்ணாக்குடன் மாட்டுக் குளம்புச் சீவல், குதிரைக் குளம்பு சீவல், பன்றிப் புடை சேர்த்து புகைக்க உண்டாகும் புகையை மூலத்திற்குக் காட்ட மூலரோகம் குணப்படும்.

பின்னாக்கைப் பொடித்து மூக்கிலிட நாசியில் நீர் பாய்ந்து தும்மளுண்டாகு திரி தோட்டம் நீங்கும். இப் பொடியை வறுத்து போதுமான சூட்டுடன் ஒற்றிடமிட பீஜ வீக்கம் குறையும் மற்ற வாத வீக்கங்களுக்கு இவ்வாறே செய்யலாம்.

தலையில் எண்ணெய்ச் சிகை போக்க இதை உபயோகிக்கலாம். அரைத்து தண்ணீரில் கலக்கி கொடுக்க வாந்தி யுண்டாக்கி ஊமத்தங் காய் தின்றவர்களுக்கு கொடுத்து வாந்தி உண்டாக்கி விசத்தை முறிக்கலாம்.

இந்த எண்ணெய் கடைகளில் கிடைக்கும்.       

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி